சுகாதாரம் இன்றி இயங்கிய 3 ஓட்டல்களுக்கு அபராதம்


சுகாதாரம் இன்றி இயங்கிய 3 ஓட்டல்களுக்கு அபராதம்
x

வேப்பூரில் சுகாதாரம் இன்றி இயங்கிய 3 ஓட்டல்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். மேலும் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

கடலூர்

கடலூர்

திடீர் ஆய்வு

கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான உணவு பொருட்களும், கலப்பட பொருட்களும் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் சென்றது. அதன் பேரில் கலெக்டர் அருண்தம்புராஜ், வேப்பூர் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்யும்படி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்லதம்பி, சுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி ஆகியோர் நேற்று வேப்பூர் கூட்டுரோடு, திருச்சி சாலை, விருத்தாசலம் சாலை மற்றும் சேலம் சாலையில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஓட்டல்களில் ஆய்வு செய்ததில் காலாவதியான தக்காளி ஜாஸ், சில்லி ஜாஸ் உள்ளிட்டவையும், செயற்கை வண்ணம் பூசப்பட்ட கோழி இறைச்சியும் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஓட்டல்களில் இருந்த 2 லிட்டர் காலாவதியான ஜாஸ் மற்றும் 4 கிலோ சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

கலப்பட டீத்தூள்

இதேபோல் டீக்கடைகளில் சோதனை செய்ததில், கலப்பட டீத்தூள் பயன்படுத்தி பொதுமக்களுக்கு டீ வினியோகம் செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து சுமார் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு, இனி காலாவதியான பொருட்கள் மற்றும் கலப்பட பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததுடன், அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் கடைகளை சுகாதாரமின்றி வைத்திருந்த 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story