கூத்தாநல்லூர் புதிய பஸ் நிலையம் அருகே வேகத்தடை அமைக்கப்படுமா?


கூத்தாநல்லூர் புதிய பஸ் நிலையம் அருகே வேகத்தடை அமைக்கப்படுமா?
x

கூத்தாநல்லூர் புதிய பஸ் நிலையம் அருகே வேகத்தடை அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:-

கூத்தாநல்லூர் புதிய பஸ் நிலையம் அருகே வேகத்தடை அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

புதிய பஸ் நிலையம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள திருவாரூர்- மன்னார்குடி சாலையில் லெட்சுமாங்குடி என்ற இடத்தில் அமைந்துள்ளது கூத்தாநல்லூர் புதிய பஸ் நிலையம். இதன் அருகே உள்ள சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், இந்த சாலை திருவாரூர், நாகை, மன்னார்குடி, தஞ்சை, திருச்சி, கும்பகோணம் போன்ற நகரங்களை இணைக்கும் வழித்தடத்தில் உள்ளது.

திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, கூத்தாநல்லூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, தஞ்சையில் உள்ளஅரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஆகியவற்றுக்கு அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ்கள் இந்த சாலை வழியாக செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

விபத்துகள்

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. எதிர் எதிரே வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்துகள் ஏற்பட்டு பலர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் இந்த சாலையில் உள்ள ஆபத்தான வளைவுகளை எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டி உள்ளது.

எனவே ஆபத்தான வளைவுகள் உள்ள இந்த சாலையில் வேகத்தடை அமைத்து விபத்து அபாயத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story