மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார். கூட்டத்தில், பட்டாமாறுதல், புதியகுடும்பஅட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 226 மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை கொடுத்து குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், தனிதுணை கலெக்டர் (சமூகபாதுகாப்புத் திட்டம்) (பொறுப்பு) அழகர்சாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story