மக்கள் சந்திப்பு முகாம்
வில்லியநல்லூர் ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாம் நடந்தது
குத்தாலம் அருகே வில்லியநல்லூர் ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி தலைவர் கலைச்செல்வி செல்வராஜ் தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி சத்தியபாமா, ஊராட்சி துணைத் தலைவர் அமுதாராஜா, ஊராட்சி செயலாளர் கமலதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற உறுப்பினர் சிரஞ்சீவி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் கலந்துகொண்டு முதியோர் ஓய்வூதியம், புதிய ரேஷன் கார்டு, வீட்டுமனை பட்டா, மின்கம்பம் அமைத்தல், புதிய ரேஷன் கடைகள் அமைத்தல் உள்பட 100-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார். மேலும், துறை சார்ந்த அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். முகாமில் குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத், வட்டார தலைவர் பரதன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.