மக்கள் சந்திப்பு முகாம்


மக்கள் சந்திப்பு முகாம்
x

குத்தாலம் அருகே மக்கள் சந்திப்பு முகாம் நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம் அருகே காளி ஊராட்சியில் மக்கள் சந்திப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவி உமாபதி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தி ஸ்டாலின் வரவேற்றார். இதில், மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். முகாமில், ஒன்றிய குழு உறுப்பினர் வடவீரபாண்டியன், காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத், முருகமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் சசிகுமார் நன்றி கூறினார்.


Next Story