பலத்த சோதனைக்கு பிறகு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுமதி


பலத்த சோதனைக்கு பிறகு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுமதி
x

தொடர் தற்கொலை முயற்சி சம்பவத்தை தொடர்ந்து பலத்த சோதனைக்கு பிறகே பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

தொடர் தற்கொலை முயற்சி சம்பவத்தை தொடர்ந்து பலத்த சோதனைக்கு பிறகே பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

குறை தீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்து செல்வது வழக்கம். இவ்வாறு கொடுத்து வந்த நிலையில் சில இடங்களில் மனுக்களின் மீதும் தங்களின் புகார் மீதும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சிலர் கலெக்டர் அலுவலகம் வந்து நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு கடந்த ஓரிரு வாரங்களாக தொடர்ந்து பலர் தீக்குளித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்தும் வகையிலும் கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பலத்த சோதனை

இதன்படி மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வருபவர்களை பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்க உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது கலெக்டர் அலுவலக வளாக பகுதி முழுவதையும் முக்கிய வழித்தடங்களை தடுப்பு வேலிகள் அமைத்து ஒருவழிப்பாதை திட்டத்தில் பொதுமக்களை அனுமதிக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கிற்கு செல்லும் பல வழிகளை அடைத்து ஒரு வழியில் மட்டும் போலீசாரின் பலத்த சோதனைக்கு பின்னரே மனுவுடன் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தண்ணீர் பாட்டில்களை கூட திறந்து பார்த்து தண்ணீர்தானா என்பதை பரிசோதித்து அனுமதித்தனர்.50-க்கும் மேற்பட்ட போலீசாருடன் துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட வருவாய்த்துறையினரும் இந்த சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story