பெருந்துறை சிப்காட் பகுதியில் விவசாய நிலத்தில் கழிவுகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு


பெருந்துறை சிப்காட் பகுதியில் விவசாய நிலத்தில் கழிவுகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
x

பெருந்துறை சிப்காட் பகுதியில் விவசாய நிலத்தில் கழிவுகளை கொட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தொிவித்தனா்.

ஈரோடு

சென்னிமலை

பெருந்துறை சிப்காட் பகுதியில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளது. இங்குள்ள சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் அனுமதியுடன் விவசாய நிலங்களில் கொட்டி வந்ததாக தெரிகிறது. இதற்கு அருகில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதுபோல் சிப்காட் பகுதியில் உள்ள நிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சிலர் அனுமதியின்றி தொழிற்சாலை கழிவுகளை கொட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் அனுமதியின்றி கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்ட இடத்துக்கு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கடந்த 2 நாட்களாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பெருந்துறை தாசில்தார் சிவசங்கர், நில வருவாய் அலுவலர் தங்கராஜ், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி முத்துராஜ் ஆகியோர் சிப்காட் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள், விவசாய நிலங்களில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள் விவசாயிகளிடம் கூறும்போது, 'இனிமேல் விவசாய நிலத்தில் சிப்காட் கழிவுகளை சில விவசாயிகள் அனுமதித்தாலும் அதனை கொட்டாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


Related Tags :
Next Story