புதன்சந்தையில் கடைகள், மாட்டுச்சந்தைக்கான ஏல வைப்புத்தொகை பல மடங்கு உயர்வு-ஒன்றியக்குழு கூட்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு


புதன்சந்தையில் கடைகள், மாட்டுச்சந்தைக்கான ஏல வைப்புத்தொகை பல மடங்கு உயர்வு-ஒன்றியக்குழு கூட்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு
x

புதன்சந்தையில் கடைகள், மாட்டுச்சந்தைக்கான ஏல வைப்புத்தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டதால் ஒன்றியக்குழு கூட்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு கொடிக்கப்பட்டது.

நாமக்கல்

நாமக்கல்:

புதுச்சத்திரம் பா.ஜனதா ஒன்றிய தலைவர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து, குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதன்சந்தையில் நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் சாலைகளில் அரசுக்கு சொந்தமான 21 கடைகள் உள்ளன. அந்த கடைகள் ஏலத்திற்கான வைப்புத்தொகை இதுவரை ரூ.2,500 மட்டுமே இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது திடீரென வைப்புத்தொகையை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை உயர்த்தி உள்ளனர்.

மேலும் புதன்சந்தை மாட்டுச்சந்தையின் உள்கேட் ஏலத்திற்கான வைப்புத்தொகை ரூ.5 ஆயிரமாக இருந்ததை தற்போது ரூ.1½ லட்சமாகவும், வெளிகேட் வைப்புத்தொகை ரூ.10 ஆயிரமாக இருந்ததை தற்போது ரூ.5 லட்சமாகவும் உயர்த்தி புதுச்சத்திரம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இதனால் டெண்டர் எடுக்க நினைக்கும் ஏழை விவசாயிகள், டெண்டர் எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. ஆதலால் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கக்கூடிய இந்த தீர்மானத்தை ரத்து செய்து, பழைய வைப்புத்தொகையையே பின்பற்ற ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.


Next Story