கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் மனு


கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்கள் மனு
x

கிராம ஊராட்சிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து தராவிட்டால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாக ஊராட்சி தலைவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் திரளாக வந்து மனு அளித்தனர்.

ராமநாதபுரம்


கிராம ஊராட்சிகளுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து தராவிட்டால் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாக ஊராட்சி தலைவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் திரளாக வந்து மனு அளித்தனர்.

மனு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 46 ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கிராம ஊராட்சி தலைவர்களாக பொறுப்பேற்று 1½ ஆண்டுகளாகியும் தமிழக அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

இதன்காரணமாக கிராம ஊராட்சிகளில் அடிப்படை தேவைகளான தெரு விளக்கு அமைத்தல், குடிநீர் குழாய்களை பராமரித்தல், சாலைகளை பராமரித்தல் போன்ற பணிகளை கூட செய்ய முடியவில்லை.

மேலும், ஊராட்சி மன்ற கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு கூட்டபடி கூட வழங்க முடியாத நிலையில் உள்ளோம். ஊராட்சிகளில் மக்களின் கோரிக்கைகளை அத்தியாவசிய பணிகளைகூட செய்து கொடுக்க முடியவில்லை. இதனால் வாக்களித்த மக்கள் கேள்வி கேட்கின்றனர்.

ராஜினாமா

எனவே, உடனடியாக ஊராட்சிகளுக்கு தேவையான மாநில நிதிக்குழு மானிய தொகையை வழங்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் ஊராட்சி தலைவர் பதவிகளை ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்ய நேரிடும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. நிதி ஒதுக்காவிட்டால் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story