நீர்ப்பிடிப்பு பகுதி அருகே வசிக்கும் இருளர் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு


நீர்ப்பிடிப்பு பகுதி அருகே வசிக்கும்  இருளர் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும்  குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு
x

நீர்ப்பிடிப்பு பகுதி அருகே வசிக்கும் இருளர் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு

தர்மபுரி

நீர்ப்பிடிப்பு பகுதி அருகே வசிக்கும் இருளர் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

கூட்டத்தில் திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் 8 உறுப்பினர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், ஊராட்சியில் மக்களுக்கு தேவையான பணிகளை மேற்கொள்வது தொடர்பான கணக்கு வழக்குகளை உறுப்பினர்களுக்கு முறையாக தெரிவிக்கவும், ஊராட்சி உறுப்பினர்களுக்கு தெரிவிக்காமல் பணிகளை மேற்கொள்வதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் பணி தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பட்டா வழங்க வேண்டும்

பாலக்கோடு தாலுகா கரிக்குட்டனூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமூக மக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் கிராமத்தில் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 72 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கூட்டுக் குடும்பங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகள் அருகே வசிக்கும் எங்களுக்கு சொந்தமாக இடமில்லை. இதனால் எங்கள் ஊரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு வீட்டுமனை வழங்க இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நாடக கலைஞர்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், தர்மபுரி மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற நாடக கலைஞர்கள் உள்ளனர். இப்போது நாடக கலைஞர்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க சேலத்தில் உள்ள மண்டல அலுவலகத்திற்கு சென்று வர வேண்டி உள்ளது. இதை தவிர்க்க தர்மபுரி மாவட்டத்தில் நாடக கலைஞர்களுக்கு உதவி மையத்தை அமைக்க வேண்டும் என்று கோரி இருந்தனர். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி அவற்றை துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


Next Story