அதிகாரியிடம் மனு


அதிகாரியிடம் மனு
x

சடையனேரி வாய்க்காலில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் செல்லும் மடைகளில் ஷட்டர் அமையுங்கள்-அதிகாரியிடம் மனு

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க தலைவர் எட்வின் காமராஜ் தலைமையில் செயலர் லூர்துமணி, நிர்வாகிகள் திரவியம், முத்துராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், தாமிரபரணி கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பனை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

மருதூர் அணைக்கட்டில் இருந்து கால்வாய் குளத்தில் மடைகளை சீரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் நிரப்பி சடையனேரி வாய்க்காலில் வழங்க வேண்டும். கால்வாய்குளம் முழுமையாக தண்ணீர் நிரம்பும் பட்சத்தில் ஊருக்குள் தண்ணீர் புகும் நிலை உள்ளது. இதனால் கரைகளையும் உயர்த்தி நீர்த்தேக்கமாக மாற்ற வேண்டும்.

சடையனேரி வாய்க்காலில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் செல்லும் மடைகளில் ஷட்டர்கள் அமைக்க வேண்டும். சடையனேரி வாய்க்கால், நீட்டிப்பு வாய்க்கால், முதலூர் ஓடை இணைப்புக் கால்வாய் ஆகியவற்றில் பல்வேறு இடங்களில் கரைகள் உடைந்துள்ள வாய்க்கால்களில் மண் மேடுகளை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story