தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் பத்மா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட ராமசந்திராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள், வல்லநாடு மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட கலியாவூர், சின்ன கலியாவூர், காலாங்கரை மற்றும் உழக்குடி ஆகிய பகுதிகளிலும், சாயர்புரம் மின் விநியோக பிரிவுக்கு உட்பட்ட செங்கமலம் மற்றும் சிவத்தையா புரம், பழையகாயல் மின்வினியோக பிரிவுக்கு உட்பட்ட பழைய காயல் உப்பள பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணிகள் நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story