சாலையில் நாற்று நட்டு போராட்டம்


சாலையில் நாற்று நட்டு போராட்டம்
x

வத்திராயிருப்பு அருகே சாலையில் நாற்று நட்டு போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ள 7-வது வார்டு அம்பேத்கர் நகரில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இந்தநிலையில் இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story