கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவி பலி


கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவி பலி
x

மானூர் அருகே கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருநெல்வேலி

நெல்லை:

மானூர் அருகே கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

பிளஸ்-1 மாணவி

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உக்கிரன்கோட்டை மறக்குடி ரஸ்தா பகுதியைச் சேர்ந்தவர் முத்து கணேஷ். முடி திருத்தும் தொழிலாளி. இவருடைய மகள் திவ்யா (வயது 16). இவர் நெல்லையை அடுத்த பேட்டையில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவர் நேற்று மதியம் தன்னுடைய தம்பி பிரேம்குமார் (14), அத்தை மகளான ஜெய மகாலட்சுமி (17) ஆகியோருடன் அப்பகுதியில் உள்ள வேல்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.

கிணற்றில் மூழ்கி...

திவ்யாவுக்கு நீச்சல் தெரியாததால், கிணற்றின் ஓரத்தில் கற்களை பிடித்து கொண்டு குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேம்குமார், ஜெய மகாலட்சுமி ஆகியோர் கூச்சலிட்டனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். கிணற்றில் அதிக ஆழத்துக்கு தண்ணீர் இருந்ததால் திவ்யாவை மீட்க முடியவில்லை.

இதுகுறித்து கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையத்துக்கும், மானூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, திவ்யாவை பிணமாக மீட்டனர். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story