பா.ம.க. செயற்குழு கூட்டம்
பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பரத், வேலாயுதம், நீலகண்டன், திருமலை, ஞானசேகர், சஞ்சீவிராயன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் துளசி ரவி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுப்ரமணி, நெடுமாறன் பசுமைத்தாயகம் மாநில துணை அமைப்பாளர் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் திண்ணைப் பிரசாரம் செய்வது, ஆவின் பால் விலை உடர்வை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்வது. வேலூரில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ்கள் ராணிப்பேட்டை நகருக்கு வந்து செல்ல தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆற்காடு நகரின் மையப் பகுதியில் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.