பா.ம.க. செயற்குழு கூட்டம்


பா.ம.க. செயற்குழு கூட்டம்
x

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் ராணிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் கே.எஸ்.ஆறுமுகம் முதலியார் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ஆ.இளங்கோ வரவேற்றார். ஒன்றிய செயலாளர் சபரிகிரிசன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.சண்முகம், இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் பகவான் கார்த்தி, மாநில சட்ட பாதுகாப்பு துணைத் தலைவர் ஜெ.ஜானகிராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எல்.எஸ்.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வருகிற 23-ந் தேதி மாவட்ட செயலாளர் எம்.கே. முரளி இல்ல திருமண விழாவிற்கு வருகை தரும் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, இந்தியாவின் வருமானத்தையும், வளர்ச்சியையும் பெருக்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ஜி.எஸ்.டி. ஏழைகளை கசக்கி பிழிகிறது என தொண்டு நிறுவனம் ஒன்றின் ஆய்வில் தெரிய வருகிறது. எனவே பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக வரியும், ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்த வரியும் விதிக்க வேண்டும். ஆற்காடு பஜார் வீதியில் கால்வாய் மேல் உள்ள சிறிய பாலம் உயரமாக போடப்பட்டுள்ளது, அதன் உயரத்தை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story