காளை விடும் விழா நடக்கும் ஊர்களில் போலீசார் கொடி அணிவகுப்பு


காளை விடும் விழா நடக்கும் ஊர்களில் போலீசார் கொடி அணிவகுப்பு
x

காளை விடும் விழா நடக்கும் ஊர்களில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

காளை விடும் விழா நடக்கும் ஊர்களில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கலசபாக்கம் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பொங்கலையொட்டி காளை விடும் விழா நடத்தப்பட்டு வருகிறது. விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகளை உரிமையாளர்கள் ஓடவிடுவர். இதனை பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டுமகிழ்வார்கள். விழா நடைபெறும் ஊர்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பாதுகாப்பு கருதி போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கலசபாக்கம் ஒன்றியத்தில் உள்ள கடலாடி, கீழ்பாலூர், வீரளூர், மேல்சோழங்குப்பம், ஆதமங்கலம் புதூர், கேட்டவரம்பாளையம், உட்பட பல்வேறு கிராமங்களில் போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.


Next Story