விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருப்பத்தூர்

ஆம்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆம்பூர் கஸ்பா பகுதியில் இருந்து பல்வேறு முக்கிய சாலைகள் வழியாக ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீசார் 200-க்கும் மேற்பட்டோர் அணிவகுத்து ஊர்வலமாக சென்றனர்.


Next Story