பாப்பிரெட்டிப்பட்டி அருகே வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை


பாப்பிரெட்டிப்பட்டி அருகே   வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை
x

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.பள்ளிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியின் பாதுகாப்பு பெட்டக அறையின் சுவற்றில் மர்ம நபர்கள் துளை போட்டு நகை, பணத்தை திருட முயன்றனர். சுவரில் துளை போட முடியாததால் 5 ஆயிரம் பவுன் நகைகள், ரூ.20 லட்சம் தப்பியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார். இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க அரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பெனாசிர் பாத்திமா நேரடி மேற்பார்வையில் 2 தனிப்படை அமைத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story