உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 17 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 17 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x

வாட்ஸ்-அப், முகநூல் மூலம் கலவரத்துக்கு அழைத்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 17 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகி்ன்றனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

வன்முறைசின்னசேலம் அடுத்த கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதியின் சாவுக்கு நீதி கேட்டு கடந்த 17-ந்தேதி பள்ளி முன்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் புகுந்து சூறையாடியதோடு, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் வாகனங்களை தீ வைத்து எரித்தனர்.

மேலும் பள்ளி வகுப்பறை மற்றும் அலுவலகத்துக்குள் புகுந்து தீ வைத்தனர். இதில் மாணவ-மாணவிகளின் சான்றிதழ்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தீக்கிரையாகின. மாணவி மர்ம சாவு மற்றும் கலவரம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் கோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வலைவீச்சு

மேலும் இந்த வன்முறை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு அவர்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று கலவரத்துக்கு காரணமானவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் முகநூல் மற்றும் வாட்-அப் குழு மூலம் கலவரத்தை ஏற்படுத்த உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த 2 அட்மின்கள் உள்பட 17 பேர் காரணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கலவரத்துக்கு காரணமாக இருந்த அந்த 17 பேரையும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் வலைவிசி தேடி வருகின்றனர்.


Next Story