பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் சார்பில் கடந்த 16-ந் தேதி முதல் 25- ந் தேதி வரை மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.இந்த போட்டியில் வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றும் கேத்ரின் எஸ்தர் கலந்துகொண்டு 4 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.தங்கப்பதக்கம் பெற்ற போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் கேத்ரின் எஸ்தரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பாராட்டி, புத்தகங்களை வழங்கி கவுரவித்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் கேத்ரின் எஸ்தர் கூறுகையில், கடுமையான பணி சூழ்நிலையிலும் என் மீது நம்பிக்கை வைத்து துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.