போலீஸ் பயிற்சி நிறைவு விழா


போலீஸ் பயிற்சி நிறைவு விழா
x

போலீசார் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் உள்ள தற்காலிக போலீசார் பயிற்சி பள்ளியில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. 98 பேர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்றனர். விழாவிற்கு தமிழக சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. டாக்டர் தினகரன் தலைமை தாங்கி பயிற்சி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். பின்னர் அவர் சிறப்பாக பயிற்சி பெற்ற போலீசாருக்கு பதக்கங்களும், பரிசுகளும் வழங்கினார். விழாவில் ஐ.ஜி. டாக்டர் தினகரன் பேசியதாவது:- தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து போலீசாருக்கு நிகரானது என்றும், இந்த போலீஸ் துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்த நீங்கள் இதை நல்ல முறையில் பயன்படுத்தி எதிர்காலத்தில் சிறப்பு பெற வேண்டும் என்றார். இதில் பள்ளி முதல்வர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் துணை போலீஸ் சூப்பிரண்டு முகேஷ் ஜெயக்குமார் நன்றி கூறினார்.


Next Story