தம்பதியை தாக்கிய 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


தம்பதியை தாக்கிய 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x

பண்ருட்டி அருகே தம்பதியை தாக்கிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள வி.ஆண்டிகுப்பம் நந்தனார் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம். சம்பவத்தன்று இவர் தனது வீட்டின் முன்பு நிர்வாணமாக நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த எதிர் வீட்டை சேர்ந்த நவீன்குமார் (வயது 42), அவருடைய மனைவி கலைவாணி ஆகியோர் சண்முகத்தை கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் தனது உறவினர்கள் சவுந்தர்ராஜன், ராஜேஸ்வரி, உஷா ஆகியோருடன் சேர்ந்து நவீன்குமார், கலைவாணியை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சண்முகம் உள்ளிட்ட 4 பேர் மீது பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story