பள்ளத்தூர், கானாடுகாத்தான் பேரூராட்சிகளில்-பொங்கல் விழா கொண்டாட்டம்


பள்ளத்தூர், கானாடுகாத்தான் பேரூராட்சிகளில்-பொங்கல் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:46 PM GMT)

பள்ளத்தூர், கானாடுகாத்தான் பேரூராட்சிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடி

பள்ளத்தூர், கானாடுகாத்தான் பேரூராட்சிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளத்தூர்

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பேரூராட்சி தலைவர் சாந்திசிவசங்கர் தலைமை தாங்கினார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா, செயல் அலுவலர் உமாமகேஸ்வரன், துணைத்தலைவர் ருக்குமணி, உறுப்பினர்கள் மஜித், பெரியசாமி, மீனாள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் புகையில்லா பொங்கலை கொண்டாடுவோம், பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியை எடுத்து கடைகளில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.

கானாடுகாத்தான்

இதேபோல் கானாடுகாத்தான் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் விழா பேரூராட்சி தலைவர் ராதிகா தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு செயல் அலுவலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். விழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அழகப்பா கலைக்கல்லூரி

காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் வரலாறு, பொருளியல், தொழில் நிர்வாகவியல், கணிதம், ஆங்கிலம், இயற்பியல், தாவரவியல், வணிகவியல் ஆகிய துறைகள் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி மாணவ-மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

தொடர்ந்து மாணவர்களுக்கு உறியடி போட்டியும், மாணவிகளுக்கு கும்மி போட்டியும் நடைபெற்றது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


Next Story