பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு


பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு
x
தினத்தந்தி 13 Sept 2022 6:17 PM IST (Updated: 13 Sept 2022 6:22 PM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

பொங்கல் விழா

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் தொடங்கியது. விழாவில் சுமங்கலி பூஜை நடந்தது. காலை 9 மணிக்கு மங்கள வாத்தியம், 10 மணிக்கு பஜனை, 10.45 மணிக்கு பொங்கல் வழிபாடு போன்றவை நடந்தது.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் குத்துவிளக்கு ஏற்றினார். பொங்கல் வழிபாட்டை மேகலை மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார், கண்காணிப்பாளர் ஆனந்த், மண்டைக்காடு பேரூராட்சி மன்ற தலைவி ராணி ஜெயந்தி, தேவி சேவா சங்க தலைவர் காளிப்பிள்ளை, ஹைந்தவ (இந்து) சேவா சங்க நிர்வாகிகள் முருகன், சசீதரன், ஸ்ரீபத்மநாபன், ஸ்ரீதேவி கலாமன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருவிளக்கு வழிபாடு

விழாவையொட்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோவில் வளாகத்திலும், 4 வீதிகளிலும் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மதியம் 12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 1 மணிக்கு தீபாராதனை தொடர்ந்து அன்னதானம் போன்றவை நடந்தது.

விழாவில் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களுக்கும், மண்டைக்காடு தேவஸ்தான மேலநிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்குதல், இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


Next Story