சத்தியமங்கலம் மார்க்கெட்டில் உச்சத்துக்கு சென்ற மல்லிகைப்பூ விலை; கிலோ ரூ.4,550-க்கு விற்பனை


சத்தியமங்கலம் மார்க்கெட்டில் உச்சத்துக்கு சென்ற மல்லிகைப்பூ விலை; கிலோ ரூ.4,550-க்கு விற்பனை
x

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை உச்சத்துக்கு சென்றது. ஒரு கிலோ ரூ.4,550-க்கு விற்பனையானது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை உச்சத்துக்கு சென்றது. ஒரு கிலோ ரூ.4,550-க்கு விற்பனையானது.

மல்லி ரூ.4,550

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு 1 டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருந்தது.

இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.4,550-க்கும், முல்லை ரூ.2,400-க்கும், காக்கடா ரூ.3,000-க்கும், செண்டுமல்லி ரூ.89-க்கும், பட்டுப்பூ ரூ.160-க்கும், ஜாதிமல்லி ரூ.1,500-க்கும், கனகாம்பரம் ரூ.990-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.420-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.

விலை உயர்ந்தது

நேற்று முன்தினம் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,572-க்கும், முல்லை ரூ.1,760-க்கும், காக்கடா ரூ.1,750-க்கும், செண்டுமல்லி ரூ.90-க்கும், பட்டுப்பூ ரூ.135-க்கும், ஜாதிமல்லி ரூ.1,375-க்கும், கனகாம்பரம் ரூ.650-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.380-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.

ஒரே நாளில் மல்லிகைப்பூ கிலோவுக்கு 1,978 ரூபாய் அதிகரித்தது. இதேபோல் முல்லை ரூ.640-ம், காக்கடா ரூ.1,250-ம், பட்டுப்பூ ரூ.25-ம், ஜாதிமல்லி ரூ.125-ம், கனகாம்பரம் ரூ.340-ம், சம்பங்கி ரூ.40-ம் விலை உயர்ந்தது.

விலை உயர்வு பற்றி சங்க நிர்வாகிகள் கூறும்போது, பனிப்பொழிவின் காரணமாக பூக்களின் விளைச்சல் வெகுவாக குறைந்துவிட்டது. அதே நேரம் தைப்பொங்கல் காரணமாக தேவை அதிகரித்து உள்ளது. அதனால் விலை உயர்ந்துவிட்டது என்றார்கள்.


Next Story