நாளை மின்சாரம் நிறுத்தம்


நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:45 AM IST (Updated: 6 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பழனி, விருவீடு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

திண்டுக்கல்

பழனி துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி பழனி நகர், ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, சின்னக்கலையம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவலை பழனி மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளார்.


இதேபோல் விருவீடு துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி விருவீடு, விராலிமாயன்பட்டி, நடுகோட்டை, ராஜாதானிகோட்டை, தெற்கு வலையப்பட்டி, வடக்கு வலையப்பட்டி, குன்னத்துப்பட்டி, காமாட்சிபுரம், சந்தையூர், தாதபட்டி, செக்காபட்டி, மீனாங்கண்ணி பட்டி, ராஜா நகர் மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய பகிர்மான செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.





Next Story