கறம்பக்குடி, குன்றாண்டார்கோவில் பகுதிகளில் நாளை மின்தடை


கறம்பக்குடி, குன்றாண்டார்கோவில் பகுதிகளில் நாளை மின்தடை
x

கறம்பக்குடி, குன்றாண்டார்கோவில் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படுகிறது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும், கறம்பக்குடி நகர், தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு, ராங்கியன்விடுதி, திருவோணம், பிலாவிடுதி அம்புக்கோவில், மைலன்கோன்பட்டி, மருதன்கோன்விடுதி, வாண்டான்விடுதி, பந்துவகோட்டை, ரெகுநாதபுரம், புதுவிடுதி, தட்டாமனைபட்டி, கீராத்தூர், செங்கமேடு, பல்லவராயன்பத்தை, சூரக்காடு, முள்ளங்குறிச்சி, திருமணஞ்சேரி, பட்டத்திகாடு, கருக்காகுறிச்சி, நெடுவாசல், குரும்பிவயல், திருமுருகபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று கறம்பக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

குன்றாண்டார்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் குன்றாண்டார்கோவில், தெம்மாவூர், செங்களூர், கிள்ளுக்கோட்டை, உடையாளிப்பட்டி, ராக்கதாம்பட்டி, ஒடு்கம்பட்டி, வாழமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது என்று கீரனூர் உதவி செயற்பொறியாளர் முத்துக்கருப்பன் தெரிவித்துள்ளார்.


Next Story