'மாண்டஸ்' புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும்: மின்வாரியம் அறிவிப்பு


மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும்: மின்வாரியம் அறிவிப்பு
x

காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 210 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது! கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும் மாமல்லபுரத்தில் இருந்து 180 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 02.30 மணிக்குள் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது ,காற்றின் வேகத்திற்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

புயல் கரையை கடக்கும்போது ஏற்படும் மின்சாரம் தொடர்பான பாதிப்புகளை சரிசெய்ய ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிட்டுள்ளது.


Next Story