இல்லம் தேடி கல்வி மையங்களில் விபத்தில்லா தீபாவளி குறித்து செயல் விளக்கம்


இல்லம் தேடி கல்வி மையங்களில் விபத்தில்லா தீபாவளி குறித்து செயல் விளக்கம்
x
தினத்தந்தி 21 Oct 2022 6:45 PM GMT (Updated: 21 Oct 2022 6:45 PM GMT)

இல்லம் தேடி கல்வி மையங்களில் விபத்தில்லா தீபாவளி குறித்து செயல் விளக்கம்

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு வரும் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல் விளக்க நிகழ்ச்சி கொத்தங்குளம் கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் தலைமை தாங்கினார். இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி முன்னிலை வகித்தனர். இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் வரவேற்றார். கொத்தங்குளத்தில் செயல்படும் 6 இல்லம் தேடி கல்வி மையங்களின் மாணவர்களுக்கு தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசு எவ்வாறு பாதுகாப்பாக வெடிப்பது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. மேலும் சிறுவர்கள் பெற்றோரின் முன்னிலையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும், பட்டாசு வெடிக்கும் போது இறுக்கமான ஆடைகளை அணியாமல், பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என விளக்கப்பட்டது.நிகழ்ச்சியில் கொத்தங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர், தன்னார்வலர்கள் வீரலட்சுமி, மகாலட்சுமி, முத்துலட்சுமி, நிவேதா, காளீஸ்வரி மற்றும் பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு வழங்கப்பட்டது.


Next Story