சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

திருச்சி

முசிறி:

முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து சந்திரமவுலீஸ்வரர், கற்பூரவள்ளி அம்மன் உற்சவர் கோவிலை வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனமர் காசிவிஸ்வநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் காருகுடி கிராமத்தில் ரேவதி நட்சத்திர தலமான கைலாசநாதர் கோவில், மங்கலம் கிராமத்தில் மங்கைபாகேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றது.உப்பிலியபுரத்தை அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டியில் உள்ள சவுந்தரவல்லி தாயார் உடனுறை சோமநாத சுவாமிகள் கோவிலில் நந்திகேஸ்வரருக்கும், உப்பிலியபுரத்தில் நித்தியகல்யாணி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.


Next Story