கோவில் கொடை விழாவில் சாமியாடிய பூசாரி கிணற்றில் தவறி விழுந்து சாவு


கோவில் கொடை விழாவில் சாமியாடிய பூசாரி கிணற்றில் தவறி  விழுந்து சாவு
x

தூத்துக்குடி அருகே கோவில் கொடை விழாவில் சாமியாடிய பூசாரி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி அருகே கொடை விழாவில் சாமியாடிய பூசாரி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கோவில் பூசாரி

தூத்துக்குடி அருகே தெய்வச்செயல்புரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). இவர் பக்கத்து ஊரான எல்லைநாயக்கன்பட்டியில் உள்ள கருப்பசாமி கோவிலில் பூசாரியாக இருந்தார்.

அந்த கோவிலில் நேற்று முன்தினம் திருவிழா நடந்தது. அப்போது நள்ளிரவில் பூசாரி முருகன் சாமியாடியவாறு வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

கிணற்றில் தவறி விழுந்து...

கோவிலில் இருந்து வேட்டைக்கு புறப்பட்ட பூசாரி முருகன் அங்குள்ள காட்டு பகுதிக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், பூசாரி முருகனை தேடிச் சென்றனர்.

அப்போது காட்டுப்பகுதியில் உள்ள பாழடைந்த தரைமட்ட கிணற்றில் பூசாரி முருகன் தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுபற்றிய தகவல் அறிந்ததும், புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த முருகனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அருகே கொடை விழாவில் சாமியாடிய பூசாரி கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story