புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர் சென்றடைந்தார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்


புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர் சென்றடைந்தார் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 23 May 2023 4:18 PM IST (Updated: 23 May 2023 9:45 PM IST)
t-max-icont-min-icon

சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள், வர்த்தக அமைப்பினர், அதிகாரிகளை சந்திக்க உள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டுக்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். ஜப்பான், சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள், வர்த்தக அமைப்பினர், அதிகாரிகளை சந்திக்க உள்ளார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 11.25 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் புறப்பட்டார் .

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சிங்கப்பூர் சென்றடைந்தார். அங்கு 2 நாள் நடைபெறும் நிகழ்ச்சிகளில்பங்கேற்கிறார்.

தொடர்ந்து, 25-ந்தேதி ஜப்பான் செல்கிறார். அங்கு 7 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 31-ந்தேதி பிற்பகல் சென்னை திரும்புகிறார்.


Next Story