முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 17 Aug 2023 6:45 PM GMT (Updated: 17 Aug 2023 6:46 PM GMT)

ராமநாதபுரம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டிய குதிரை நடனத்தை பார்த்து ரசித்தார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்.

ராமநாதபுரம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டிய குதிரை நடனத்தை பார்த்து ரசித்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை

ராமநாதபுரத்தில் தி.மு.க. தென் மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று ராமநாதபுரம் வந்தார். அவருக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன், தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கூட்டணிக் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

பாரதி நகரில் மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நாட்டிய குதிரை, நடனம், பொம்மை ஆட்டம், நாட்டுப்புற நிகழ்ச்சி, மற்றும் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த இடத்தில் சிறிது நேரம் முதல்-அமைச்சர் காரில் அமர்ந்தவாறு நிகழ்ச்சிகளை பார்வையிட்டு அங்கு நின்றிருந்த இளைஞர்களிடம் பேசினார். அதன் பிறகு அவர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

வரவேற்பு

முதல்-அமைச்சருக்கு தி.மு.க. கட்சியைச் சேர்ந்த முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலருமான குணசேகரன் தலைமையில் மாவட்ட பொறியியல் அணி தலைவர் அருண் குணசேகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுபோல் தி.மு.க. மாவட்ட பிரதிநிதி டி.கே. குமார் தலைமையில் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் அப்துல் பாசித், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், சர்க்கரைகோட்டை ஊராட்சி தி.மு.க. பிரமுகர் இந்திரஜித் என்ற மதி, செந்தில்குமார், நேரு நகர் சீனிவாசன், உள்ளிட்டவர்கள் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் ராமநாதபுரம் வடக்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் கா.நாகலிங்கம் தலைமையில் அச்சுந்தன் வயல் செயலாளர் லிங்கம், காரேந்தல் தி.மு.க கிளை பொறுப்பாளர் மாரி, கூரியூர் கிழக்கு கிளைச் செயலாளர் சுலைமான் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.


Related Tags :
Next Story