மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக பிரதமர் மோடி பயணம்...!
மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக பிரதமர் மோடி செல்கிறார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று திண்டுக்கல் வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றினார். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திண்டுக்கல்லில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக மதுரைக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் செல்லாமல் காரில் திண்டுக்கல்லில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். பிரதமர் மோடி சாலை மார்க்கமாக செல்வதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story