தனியார் நிறுவன ஊழியர் பலி


தனியார் நிறுவன ஊழியர் பலி
x

தஞ்சை அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

தஞ்சாவூர்

தஞ்சை அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

தனியார் நிறுவன ஊழியர்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வெள்ளாம்பெரம்பூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பாரதிதாசன்(வயது 38). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தொடர் விடுமுறையையடுத்து கனகராஜ் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் திருப்பூர் செல்வதற்காக தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் ஏறி பயணம் செய்தார். ரெயிலில் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்தார்.

தவறி விழுந்து பலி

அந்த ரெயில் தஞ்சையை அடுத்த ஆலக்குடி-பூதலூர் ரெயில் நிலையத்துக்கு இடையே சென்றபோது எதிர்பாராதவிதமாக ஓடும் ரெயிலில் இருந்து பாரதிதாசன் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த பாரதிதாசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story