தனியார் வேலைவாய்ப்பு முகாம்


தனியார் வேலைவாய்ப்பு முகாம்
x

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம் சார்பில், மாணவ-மாணவிகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம் சார்பில், மாணவ-மாணவிகளுக்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கீழ்க்கண்ட கல்லூரிகளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் இ.எஸ்.ஏ.எப். ஸ்மால் பைனான்ஸ் வங்கி நிறுவனத்தில் செயல் அதிகாரி, விற்பனை அதிகாரி போன்ற பணியிடத்திற்கு தகுதி உள்ள பட்டதாரி மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வேலைவாய்ப்பு முகாமானது 5-ந்தேதி (இன்று) நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியிலும், 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியிலும், வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பாளையங்கோட்டை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியிலும் நடைபெற உள்ளது.

2021 - 2022-ம் ஆண்டு அனைத்து பிரிவுகளிலும் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் முகாமில் கலந்து கொள்ளலாம். பதிவு கட்டணம் கிடையாது. நேர்முகத்தேர்வு மட்டும் நடைபெறும். இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் தங்களது பயோ டேட்டா, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கல்வி சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் தாங்கள் வசிக்கும் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு முகாமில் நடைபெறும் கல்லூரிக்கு காலை 10 மணி அளவில் நேரில் வந்து பதிவு செய்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.


Next Story