தனியார் வேலைவாய்ப்பு முகாம்
நெல்லையில் 17-ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
நெல்லையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாதம் தோறும் 3-வது வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17-ந்தேதி காலை 10.30 மணிக்கு நெல்லை பெருமாள்புரம் சிதம்பரம்நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து நடத்தப்பட உள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.
இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் தங்களின் கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது.
இந்த தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய அந்தோணி தெரிவித்து உள்ளார்.