தனியார் வேலைவாய்ப்பு முகாம்
நெல்லையில் 17-ந்தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமையில் தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 17-ந்தேதி நெல்லை பெருமாள்புரம் சிதம்பரம்நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வைத்து நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.
இந்த தகவலை நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றம் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் மரியசகாய ஆண்டனி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story