ரூ.32 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்


ரூ.32 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 March 2023 6:45 PM GMT (Updated: 21 March 2023 6:46 PM GMT)

கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

சிவகங்கை

திருப்பத்தூர்,

கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

சீரான மின் வினியோகம்

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிராவயல் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாமடம் கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் கம்பனூர் ஊராட்சி கூத்தக்குடி கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தடையின்றி சீரான மின்சார வினியோகம் வழங்க புதிதாக ரூ.9.89 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பலவான்குடி ஊராட்சி ஆளத்துப்பட்டி கிராமத்தில் ரூ.14.59 லட்சம் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள உணவு தானியங்கி கிடங்கும் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நலத்திட்டங்கள்

இந்நிகழ்ச்சியில் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், முதல்-அமைச்சர் முக.ஸ்டாலினால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கி வருவது மட்டுமின்றி அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலும் அடிப்படை வசதியினை மேம்பாடு அடைய செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கான ஆண்டிற்கு சுமார் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்கு மக்களின் தேவைகளை அறிந்து தொடர்ந்து பல்வேறு பணிகளை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கல்லல் ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் அசோகன், கண்டரமாணிக்கம் தொழிலதிபர் மணிகண்டன், பாண்டியன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் லதாதேவி, கண்டரமாணிக்கம் உதவி பொறியாளர் சந்திரசேகர், திட்ட இயக்குனர் சிவராமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிராவயல் சரோஜாதேவி குமார், கம்பனூர் அமுதா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட கவுன்சிலர் மன்சரி லட்சுமணன் மற்றும் அரசு அலுவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


Next Story