அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகையில் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகையில் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் பறிக்கப்பட்ட அகவிலைப்படி, சரண் விடுப்பு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர் புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்

அரசு துறைகளில் காலியாக உள்ள 4½ லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கினார். நாகை மாலி எம்.எல்.ஏ. கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். போராட்டத்தில் மாவட்ட செயலாளர் அன்பழகன், தொழிற் சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிவக்குமார், ஓய்வூதியர் சங்க பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story