ஓசூரில் ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஓசூர்:
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி ஓசூர் மாநகர குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் வேலுசாமி தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் பழனி, மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பி.கே.பட்டாபி ராமன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் ராமசாமி ரெட்டி, முன்னாள் மாநில துணை செயலாளர் எஸ்.சுந்தரம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ராமஜெயம், சங்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், மத்திய, மாநில அரசுகள் 6 மணி நேர வேலையை சட்டமாக்கி, கூடுதல் வேலைவாய்ப்பை வழங்க முன்வர வேண்டும். ஓசூர் மாநகராட்சியில் போர்க்கால அடிப்படையில் ஷேர் ஆட்டோ முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.