வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்


வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
x

நெல்லை அருகே வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள்

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள பருத்திப்பாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேர்ந்தான்குளம் கிராமத்தில் 3 தலைமுறைகளாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். பல ஆண்டுகளாக வசித்து வரும் கிராம மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையீட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேர்ந்தான்குளம் கிராம மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வீடுகள், கிணறு மற்றும் கோவில்களை சுற்றி சிலர் முள்வேலிகள் அமைத்து உள்ளனர். இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் வேலி அமைத்திருப்பதை கண்டித்தும், இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதித்து வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், உடனே பட்டா வழங்க கோரியும் நேற்று சேர்ந்தான்குளம் கிராம மக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் செயல்பட்டனர்.


Next Story