பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட மாநாடு
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடைெபற்றது.
விருதுநகர் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க 11-வது மாவட்ட மாநாடு பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநிலத்தலைவர் பாபு ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் சமுத்திரக்கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பிற மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்ட தலைவராக இளமாறனும், மாவட்ட செயலாளராக ஜெயகுமாரும், மாவட்ட பொருளாளராக ராதாகிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பி.எஸ்.என்.எல். நிர்வாகத்திற்கு 4ஜி, 5ஜி வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் உடனடியாக வழங்க வேண்டும். புதிய பதவி உயர்வு கொள்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் பேசிய மாநில தலைவர் பாபு ராதாகிருஷ்ணன் ஒப்பந்த தொழிலாளர்கள் வாழ்வை மேம்படுத்த பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.