கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு


கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு
x

கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிப்பு செய்தனர்.

திருப்பத்தூர்

நவம்பர் 1-ந் தேதியை உள்ளாட்சி தினமாக தமிழக அரசு அறிவித்து, அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி கந்திலி ஒன்றியம் நார்சம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கும்மிடிகாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி நார்சம்பட்டி ஊராட்சி எல்லையில் உள்ளது. பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் தொழில் வரியை, நார்சம்பட்டி ஊராட்சியினர் வசூலித்துக் கொள்ள சென்னை ஜகோர்ட்டு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து நார்சம்பட்டி ஊராட்சி மூலம் பள்ளியில் தொழில்வரி கேட்டபோது தலைமை ஆசிரியர் நார்சம்பட்டி ஊராட்சிக்கு வரி செலுத்த மாட்டோம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கும்மிடிகாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தொழில் வரி கட்டினால் மட்டுமே கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கூறி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் துரை மற்றும் உதவி திட்ட அலுவலர்கள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, கும்மிடிகாம்பட்டி அரசு பள்ளி ஆசிரியர்களிடம் தொழில் வரி வசூலித்து கொடுத்தனர். அதைத்தொடர்ந்து மூன்று மணி நேரந்திற்கு பிறகு மீண்டும் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


Next Story