கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x

மடிப்பாக்கம் கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

மடிப்பாக்கம் கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

செய்யாறு தாலுகா மடிப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பிரதான தொழிலாக விவசாயம் விளங்குகிறது. இந்த கிராமத்தில் தனியார் நிறுவனம் கல் குவாரி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பெரிதும் பாதிக்கும் என்பதால் கல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தொடர்ந்து அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திட சென்றபோது உதவி கலெக்டர் அனாமிகா ஆய்வு பணிக்காக சென்றிருந்ததால் அவர்கள் 2 மணி நேரம் காத்திருந்தனர். அப்போது அலுவலகத்திற்கு வந்த உதவி கலெக்டர் அனாமிகாவை கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கல்குவாரி அமைந்தால் விவசாயம் பெரிதும் பாதிக்கும் எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை உதவி கலெக்டர் அனாமிகா சமரப்படுத்தினார்.

பின்னர் தங்களது கோரிக்கை மனுவினை உதவி கலெக்டர் அனாமிகாவிடம் வழங்கி கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story