குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் காந்தி நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி- பெரம்பலூர் சாலையில் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி மன்ற தலைவர் சுமதி முருகேசன் மற்றும் கை.களத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது பொது குடிநீர் கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வரக்கூடிய குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை உடனடியாக சீரமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் கள்ளக்குறிச்சி- பெரம்பலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story