தொகுப்பு வீடு பழுது நீக்கம் செய்தல் திட்டத்தின்கீழ் சீரமைப்பு தொகை வழங்கப்படாததால் பொதுமக்கள் குமுறல்


தொகுப்பு வீடு பழுது நீக்கம் செய்தல் திட்டத்தின்கீழ் சீரமைப்பு தொகை வழங்கப்படாததால் பொதுமக்கள் குமுறல்
x

தொகுப்பு வீடு பழுது நீக்கம் செய்தல் திட்டத்தின்கீழ் சீரமைப்பு தொகை வழங்கப்படாததால் குமுறும் பொதுமக்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு அளித்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அதிகாரி கலைவாணியிடம் அளித்தனர். இதில் குமுழியம் காலனி தெருவை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், தங்களது பகுதியை சார்ந்த 13 பேருக்கு தொகுப்பு வீடு பழுது நீக்கம் செய்தல் திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் மதிப்பில் பழுது நீக்கம் செய்ய ஆணை வழங்கப்பட்டது. 31.12.2021 தேதிக்குள் பழுது நீக்கம் செய்து அதற்கு உண்டான புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும் என ஆணை அளிக்கப்பட்டது.

50 சதவீதம் வேலை முடிந்தவுடன் ரூ.25 ஆயிரம் பணமும், முழு வேலையும் முடிந்தவுடன் மீதமுள்ள ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் முடிந்து சுமார் 6 மாதங்கள் ஆகியும் இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. தாங்கள் பணம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கியும், வட்டிக்கு வாங்கியும் செலவழித்துள்ளோம். எனவே பணத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


Next Story