நாகை மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை
நாகை மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
நாகப்பட்டினம்
வங்கக்கடலில் உருவாகி உள்ள புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதால் வேதாரண்யம் பகுதியில் நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மேலும் வேதாரண்யம் தாலுகா முழுவதும் நேற்று விட்டு, விட்டு மழை பெய்தது. இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் 60 முதல் 80 நாட்கள் வளர்ந்து உள்ள நிலையில் இந்த நேரத்தில் பெய்த மழை சம்பா சாகுபடிக்கு ஏற்ற மழை என விவசாயிகள் தெரிவித்தனர். நாகையை அடுத்த நாகூரில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது. திருமருகல் வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வந்தது. இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வந்தது. நேற்று பரவலாக மழை பெய்தது.
Related Tags :
Next Story