ஜெயங்கொண்டம் பகுதியில் மழை


ஜெயங்கொண்டம் பகுதியில் மழை
x

ஜெயங்கொண்டம் பகுதியில் மழை

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டன. இதையடுத்து திடீரென மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததோடு, மாலை வேளையில் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் மழை பெய்யும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தநிலையில் மழை பெய்யாததால் ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் நேற்று சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை கொடித்தீர்த்ததால் குளிர்ந்த சீதோஷண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


Related Tags :
Next Story